எஸ்பிபி இறுதிச்சடங்கு தொடங்கியது: திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி!

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் காலமானதை அடுத்து அவரது உடல் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது 

இந்த நிலையில் இன்று அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து அங்கு இறுதிச் சடங்குக்கான பணிகள் சற்றுமுன் தொடங்கியுள்ளது 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை புரோகிதர்கள் தொடங்கி வைத்து நடத்தி வருகின்றனர். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார் 

இந்த நிலையில் எஸ்பிபிக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரை உலக பிரமுகர்கள் தாமரைப்பாக்கம் விரைந்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர், பாடகர் மனோ, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று எஸ்பிபியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று பிற்பகல் 12 மணிக்கு எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web