காப்பாற்றப்பட்ட ஆஜித், ஷிவானி, சனம்: இன்று வெளியேறுபவர் இவர்தான்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகிய 7 பேர் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் நேற்று கமல்ஹாசன் மூன்று போட்டியாளர்களை காப்பாற்றபட்டவர்களாக அறிவித்தார் 

ஆஜித், ஷிவானி மற்றும் ரம்யா ஆகிய மூவரும் நேற்று காப்பாற்றப்பட்டனர். ஏற்கனவே ஆஜித்துக்கு எவிக்சன் பாஸ் இருந்தாலும் மக்களின் வாக்குகள் அடிப்படையிலும் நேற்று அவர் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மீதமுள்ள சனம், சம்யுக்தா, ரேகா மற்றும் பாலாஜி ஆகிய நால்வரில் இன்று ரேகா வெளியேறி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் வாக்குகளின் அடிப்படையில் சனம் இந்த வாரம் நூலிழையில் தப்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிரது

கடந்த மூன்று சீசன்களில் முதல் சீசனில் அனுயா, இரண்டாவது சீசனில் மமதி, மூன்றாவது சீசனில் பாத்திமா பாபு ஆகியோர் முதல் போட்டியாளர்களாக வெளியேறிய நிலையில் இந்த சீசனில் ரேகா வெளியேறுகிறார்

From around the web