நான் ஹீரோ ஆனதுக்கு உங்க குரல் தான் காரணம்: சத்யராஜ் நெகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டும் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பகுத்தறிவாதி சத்யராஜ், எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டும் என்று வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரல் முக்கியமான காரணம். அந்த குரலை மறுபடியும் கேட்க வேண்டும்.
 

நான் ஹீரோ ஆனதுக்கு உங்க குரல் தான் காரணம்: சத்யராஜ் நெகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டும் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பகுத்தறிவாதி சத்யராஜ், எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டும் என்று வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரல் முக்கியமான காரணம். அந்த குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 படத்தில் வில்லனாக நடித்துள்ள நான் 100 படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன் என்றால் உங்கள் குரல் ஒரு முக்கிய காரணம். நான் கதாநாயகனாக நடித்த படங்களில் நீங்கள் பாடிய பாடல்கள் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ ’கொடியிலே மல்லிகைபூ’ ’ஆண்டவன பாக்கணும் அவனுக்கு ஊத்தனும்’ என ஹிட்டான பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்

அதனால் நீங்கள் பூரண குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று நான் பொது நலத்தோடு வாழ்த்துகிறேன், சுயநலத்துடன் வாழ்த்துகிறேன். சீக்கிரம் குணம் அடைந்து வந்துருங்க பாலு சார்’

இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.

From around the web