செம க்யூட் லுக்கில் டிவின் ஏஞ்சல்ஸ்!!! செமயா இருக்காங்க...

புதிய முல்லையாக நடிக்கும் காவ்யா, தெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனுடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.
 
செம க்யூட் லுக்கில் டிவின் ஏஞ்சல்ஸ்!!! செமயா இருக்காங்க...

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சினிமா சீரியலுக்கு பெருமை தேடிக் கொடுத்த ஒன்று. காரணம் தமிழில் நிறைய மற்ற மொழி சீரியல்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழிலேயே உருவாகியுள்ளது. இதைப் பார்த்த மற்ற மொழி இயக்குனர்கள் இந்த சீரியலை தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்து வருகின்றனர்.

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடம் பிரபலம் என்றாலும் இதில் நடித்துவந்த நடிகை சித்ரா மறைவிற்கு பின் சீரியலை பலரும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அடுத்தடுத்து பல மாற்றங்கள், சண்டை, பிரச்சனை என சீரியல் விறுவிறுப்பாக ஓடுகிறது. முல்லை வேடத்தில் காவ்யா என்கிற நடிகை புதிதாக நடித்து வருகிறார். அவரை முதலில் மக்கள் ஏற்கவில்லை என்றாலும் இப்போது நல்ல ரெஸ்பான்ஸ் தான்.

இந்த நிலையில் புதிய முல்லையாக நடிக்கும் காவ்யா, தெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனுடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.


 

From around the web