மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்… வலைதளங்களில் அதிரடித்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் கைவிட்டு எண்ணிவிடும் அளவே நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களில் வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் தற்போது டிரண்டிங்கில் இருப்போர்கள் ஆவார்கள். இந்தப் பட்டியலில் 2010 ஆம் ஆண்டு இணைந்தவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைப் படமான தமிழிப் படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் படத்திலேயே பெயர் சொல்லும் அளவு பரிச்சையமாகினார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு
 
மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்… வலைதளங்களில் அதிரடித்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில்  கைவிட்டு எண்ணிவிடும் அளவே நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களில் வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் தற்போது டிரண்டிங்கில் இருப்போர்கள் ஆவார்கள். இந்தப் பட்டியலில் 2010 ஆம் ஆண்டு இணைந்தவர் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைப் படமான தமிழிப் படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் படத்திலேயே பெயர் சொல்லும் அளவு பரிச்சையமாகினார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவருக்கு பெரிய அளவில் முகவரியினைக் கொடுத்தது எதிர் நீச்சல்  திரைப்படம்தான், சதீஷ்- சிவகார்த்திகேயன் காம்போ எப்போதும் சிறப்பான காம்போவாகவே இருக்கும்.

மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்… வலைதளங்களில் அதிரடித்த ரசிகர்கள்!!

அவர் முன்னணி நடிகரான விஜய்க்கும் நண்பனாக கத்தி திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றி இருப்பார், இவர் தற்போது கண்ணை நம்பாதே, ராஜ வம்சம், பூமி, பிஸ்தா, ரங்கா, தீமைதான் வெல்லும், டெடி, 4 ஜி போன்ற படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

சதீஷ் சில மாதங்களுக்கு முன்னர் சிக்ஸர் படத்தினை இயக்கிய சாசி என்ற இயக்குனரின் தங்கையான சிந்துவினை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் திருமணத்திற்குப் பின்னர் தனது முதல் பிறந்தநாளை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

இவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறியதோடு, இவரது பிரபலமான நகைச்சுவைக் காட்சிகளைப் பதிவிட்டு வலைதளங்களை அதிர விட்டனர்.

From around the web