விஜய் படத்தை இயக்க முடியாது என கூறிய வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சசிகுமார்!

 

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் அசுரன் என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் தனுஷ் நடித்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்னர் சூரி நடிக்கும் ஒரு திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்து விடும். அதன் பின்னர் ஜனவரி முதல் அவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலிருந்து ஏ ஆர் முருகதாஸ் விலகியதை அடுத்து வெற்றிமாறன் இயக்கும்படி விஜய் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் ஏற்கனவே இரண்டு படங்களில் தான் கமிட் ஆகியுள்ளதால் மூன்றாவது படத்தில் கமிட் ஆக முடியாது வெற்றி மாறன் தரப்பில் கூறி விட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் விஜய் படத்தை இயக்க முடியாது என்று கூறிய வெற்றிமாறன் தற்போது சசிகுமார் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் மற்றும் எஸ் கதிரேசனின் பைவ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web