சசிகுமார்-பொன்ராமின் ‘எம்ஜிஆர் மகன்’ ரிலீஸ் தேதி

இயக்குனர் பொன்ராம் இயக்கிய ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினிமுருகன்’ ’சீமராஜா’ ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் ’எம்ஜிஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்து இருந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சற்று முன்னர் இயக்குனர் பொன்ராம் தனது டுவிட்டரில் ஏப்ரல் 23ஆம் தேதி ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறியுள்ளார்
ஏற்கனவே இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியாவது உறுதி என்பது தற்போது தெரியவந்துள்ளது
சசிகுமார் ஜோடியாக மிருணாளினி என்ற நடிகை நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடகர் அந்தோணிதாசன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.