நன்றியை மறந்த கவின்- மனம் வருந்தும் சரவணன் மீனாட்சி இயக்குனர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். எந்த சீசனிலும் இல்லாத அளவு, 75 நாட்களுக்குள் 3 காதல் செய்து அதனை உண்மைபோலவே காட்டி எவிக்ஷனில் இருந்து தப்பிக்கிறார் கவின், மிக நேர்த்தியான விளையாட்டு இதுதான் என்று அவர் மனதிற்குள் அப்படி ஒரு நினைப்பு. ஷாக்சியிடம் விலகி, லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வரும் கவின் குறித்து
 
நன்றியை மறந்த கவின்- மனம் வருந்தும் சரவணன் மீனாட்சி இயக்குனர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின்.

எந்த சீசனிலும் இல்லாத அளவு, 75 நாட்களுக்குள் 3 காதல் செய்து அதனை உண்மைபோலவே காட்டி எவிக்ஷனில் இருந்து தப்பிக்கிறார் கவின், மிக நேர்த்தியான விளையாட்டு இதுதான் என்று அவர் மனதிற்குள் அப்படி ஒரு நினைப்பு.

நன்றியை மறந்த கவின்- மனம் வருந்தும் சரவணன் மீனாட்சி இயக்குனர்!

ஷாக்சியிடம் விலகி, லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வரும் கவின் குறித்து தவறான தகவல்கள் மட்டுமே நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைக்கிறது. கவின் காதலிப்பதும், நண்பர்களுக்காக விட்டுக் கொடுக்க விரும்புகிறேன் என்று சொல்வதும் டைட்டிலை வெல்வதற்கான உத்தி என்பது ஒருபுறம் நிலவி வருகிறது.

கவினைப் பற்றி விஜய் தொலைக்காட்சியின் இயக்குனர் பிரவீன் கருத்து கூறுகையில், சரவணன் மீனாட்சி சீரியலின் படப்பிடிப்பின் போது நடிகர் கவின் தனக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதால், சீரியலில் தொடர முடியாது என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் பாரதி கண்ணம்மா சீரியல் குறித்து ப்ரோஷனுக்கு கூப்பிட்டபோதும்கூட செய்ய மறுத்துவிட்டார், மேலும் பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும்போதும்கூட, சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து வந்தவர் என்பதை சொல்லத் தயங்கவே செய்துள்ளார் என சொல்லி வருத்தப்பட்டார்.

நண்பர்களுக்காக எதையும் செய்வேன் என்று கூறும் கவின், தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனரின் ப்ரோமோசனுக்கு ஏன் உதவி செய்யவில்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web