மக்களிடையே மன்னிப்பு கேட்ட சரவணன்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை வழக்கம் போல் இந்த முறையும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் சரவணனும் ஒருவர். கடந்த வாரம் கமல் ஹாசனின் சந்திப்பின்போது பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் பேருந்தில் வருவதும் உண்டு என்று கமல் ஹாசன் கூற அதனை தனது கையை உயர்த்தி சரவணன் ஆமோதித்தார். அதன் பிறகு இதற்கு பதிலளித்த சரவணன் கூறுகையில், நான் கல்லூரி காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று
 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை வழக்கம் போல் இந்த முறையும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் சரவணனும் ஒருவர். 

கடந்த வாரம் கமல் ஹாசனின் சந்திப்பின்போது பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் பேருந்தில் வருவதும் உண்டு என்று கமல் ஹாசன் கூற அதனை தனது கையை உயர்த்தி சரவணன் ஆமோதித்தார். 

அதன் பிறகு இதற்கு பதிலளித்த சரவணன் கூறுகையில், நான் கல்லூரி காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். இதனை சமாளிக்கும் வகையில், பேசிய கமல் ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்றார். 

மக்களிடையே மன்னிப்பு கேட்ட சரவணன்!

ஆனால், சரவணன் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாடகி சின்மயி, சரவணனுக்காக பெண்களும், பார்வையாளர்களும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். ஆனால் தற்போது சரவணன் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இதன் எதிரொலியாக, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பேசிய பிக் பாஸ் பெண்களை இழிவாகவோ, அவமரியாதை செய்வதையோ இந்நிகழ்ச்சி ஒரு போதும் அனுமதிக்காது. அதனால், மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இதையடுத்து பேசிய சரவணன், தன்னைப் போன்று இனிமேல் யாரும் செய்யக்கூடாது என்பதற்காகவே தான் தான் அவ்வாறு பேசியதாகவும், இனிமேலும், பிக் பாஸ் வீட்டிலேயேயும் சரி, வெளியிலும் சரி இது போன்று யாரும் செய்யக் கூடாது என்பதைத் தான் நான் கூற வந்தேன். ஆனால், அதற்குள் என்னால் முழுவதுமாக பேச முடியாமல் போய்விட்டது. எது எப்படியோ நான் அவ்வாறு பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


From around the web