சரத்குமாரின் குடும்ப புகைப்படம்: ராதிகாவின் டுவீட் வைரல்

 

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் குடும்பம் மிகப்பெரியது என்பதும் அவருடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது 

அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா தனது குடும்பத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்களுடன் கூடிய புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

இந்த புகைப்படத்தில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மற்றும் ராதிகா-சரத்குமாரின் மகன் ராகுல் உள்பட அனைவரும் உள்ளனர்

ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தைகள் உள்பட அனைவரும் இருக்கும் இந்த புகைப்படத்தில் ‘ஃபேமிலி டைம்’ என்று நடிகை ராதிகா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இந்த புகைப்படத்தை அடுத்து சரத்குமார் ராதிகாவின் குடும்பத்திற்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web