அப்பா பாணியில் சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் வீடியோ!!!

ட்ரெய்லரில் ஷாந்தனுவே இது ஏ-வா யு-வா? என அதகளமாக கேட்கிறார்.
 

ஷாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

நடிகர் ஷாந்தனு அண்மையில் தான் பாவக்கதைகள் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து நம்மைக் கவர்ந்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீஜர் இயக்கத்தில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் ஷாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து இருக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, தேனடை மதுமிதா, முனிஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி என ஒரு காமெடி பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம் காமெடியாகவும் கவர்ச்சியாகவும் வந்திருக்கிறது. ட்ரெய்லரில் ஷாந்தனுவே இது ஏ-வா யு-வா? என அதகளமாக கேட்கிறார். ஒரு திருமணமாகிய புதிய இளம்ஜோடிக்கு முதலிரவு நடப்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த காமெடி கலாட்டா கலந்த இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு இந்த தலைப்பே ஒரு கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கும் நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ்க்கும் உள்ள தொடர்பு அவருடைய படங்களை பார்த்து இருந்தாலே புரியும். முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ், ஊர்வசி இணைந்து நடித்தனர். அந்த படத்தில்தான் முருங்கைக்காய் பற்றிய சமாச்சாரங்களை பாக்கியராஜ் அறிமுகப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் அந்த கிளாசிக் ஜோடி இந்த படத்திலும் இணைந்து நடித்திருப்பதுடன், பாக்யராஜ் மகன் ஷாந்தனு இந்த படத்தில் முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் மூடில் நடித்திருக்கிறார். நாயகி அதுல்யா ரவி இந்த படத்தில் வேற லெவலில் கவருகிறார். இந்த படத்தை லிப்ரா ரவீந்தர் தயாரித்துள்ளார். அத்துடன் இந்த படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துமிருக்கிறார். இந்த படத்துக்கு தரன்குமார் இசையமைத்திருக்கிறார்.

From around the web