சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ ரிலீஸ் தேதி!

 

காமெடி நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும், ஹீரோவாக அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே

குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சந்தானம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதோடு டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

paris jayaraj

சந்தானம் நடித்த ஏ1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படம் பிப்ரவரி 12ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் ஜோடியாக அனைகா சோட்டி மற்றும் சாஸ்டிகா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web