பாஜகவில் இணைகிறாரா சந்தானம்: அவரே அளித்த விளக்கம்!

 

நடிகர் சந்தானம் நடித்த பிஸ்கோத் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார் ஏற்கனவே இவர் இயக்கிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த வெற்றியில் இந்த படமும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றும் இதனால் இந்த எட்டு மாதங்களில் தாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டதாகவும் ஆர் கண்ணன் தெரிவித்துள்ளார் 

santhanam 1280

அதன் பின்னர் பேசிய சந்தானம் இந்த படத்தில் மிகப் பெரும் மிகப்பெரிய அளவில் காமெடிகள் ஒர்க்-அவுட் ஆகியுள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் காமெடியை விட வெளியே சமூக வலைதளங்களில் ஒரு காமெடி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதாகவும் குறிப்பிட்டார் 

பிஸ்கோத் படத்தை விட பெரிய காமெடி நான் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்று சந்தனம் விளக்கம் அளித்தபோது அனைவரும் கொல்லென்று சிரித்தனர் 

மேலும் ஓடிடி என்பது பூஜை அறை போன்றது என்றும் தியேட்டர் என்பது கோயில் போன்றது என்றும் இரண்டிலும் தெய்வம் உள்ளது என்றும் நடிகர் சந்தானம் தியேட்டர் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web