கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுத்த சமந்தாவின் தீபாவளி!

 

தமிழ் திரையுலகில் மட்டுமன்றி தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் சமந்தா இந்த தீபாவளியை கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுத்து கொண்டாடியுள்ளார்

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட துணியில் தைத்த சுடிதாரை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் 
ஒவ்வொரு கைத்தறி நெசவாளர்களும் டிசைனர்களும் மிகுந்த சிரமத்துடன் டிசைன் செய்து ஒரு உடையை உருவாக்குகின்றனர் அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டில் தயாராகும் துணிகளுக்கு ஆதரவு கொடுப்பதை விட நம்ம ஊரில் தயாராகும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்று சமந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் 

சமந்தாவை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கைத்தறித் துணிகளை இந்த தீபாவளிக்கு எடுத்துள்ளதாக கமென்ட் பகுதியில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைத்தறி நெசவாளர்களுக்கு சமந்தா பலமுறை குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web