சந்தானம் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே கடந்த ஆண்டு சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு 2’ மற்றும் ’ஏ1’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படமான டகால்டி என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 31ஆம் தேதி இந்த படம்
 
சந்தானம் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

கடந்த ஆண்டு சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு 2’ மற்றும் ’ஏ1’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படமான டகால்டி என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 31ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகாமல் கிடப்பில் உள்ள நிலையில் அந்தப் படங்களும் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web