சானியா மிர்சா வாழ்க்கை திரைப்படமாக வருகிறது

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனது அதிரடியான விளையாட்டால் சானியா மிர்சா புகழ்பெற்றவர். பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொகேப் மாலிக்கை இவர் திருமணம் செய்து பாகிஸ்தானின் மருமகளானார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சானியா வெளியிட்டார். ஹைதரபாதில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்கிரிவாலா இப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட்டிருப்பதாகவும் படத்தில் சானியா வேடத்தில் நடிப்பது யார் என்பது
 

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனது அதிரடியான விளையாட்டால் சானியா மிர்சா புகழ்பெற்றவர். பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொகேப் மாலிக்கை இவர் திருமணம் செய்து பாகிஸ்தானின் மருமகளானார்

சானியா மிர்சா வாழ்க்கை திரைப்படமாக வருகிறது

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சானியா வெளியிட்டார். ஹைதரபாதில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்கிரிவாலா இப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட்டிருப்பதாகவும் படத்தில் சானியா வேடத்தில் நடிப்பது யார் என்பது விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சானியா மிர்சா தெரிவித்தார்.

இந்த வேடத்தில் சானியா மிர்சாவே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேரிகோம், டங்கல், பாக் மீகா பாக், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட திரைப்படங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web