கஸ்தூரியிடம் நியாயம் கேட்ட சாண்டி!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது. இதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி வேற லெவலாக எகிறியது. அதிலும் நேற்றைய எபிசோடு ஆக்ஷன் படம்போல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதாவது இன்று ஆண் போட்டியாளர்கள், பெண்களை அடிமைகள் போல மிதித்து தள்ளிவிட்டு முன்னேறுகின்றனர் என்று கூறுகிறார். இந்தக் கருத்தினை ஏற்காத தர்ஷன், கவின்,
 
கஸ்தூரியிடம் நியாயம் கேட்ட சாண்டி!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.

இதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி வேற லெவலாக எகிறியது. அதிலும் நேற்றைய எபிசோடு ஆக்ஷன் படம்போல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

கஸ்தூரியிடம் நியாயம் கேட்ட சாண்டி!!

அதாவது இன்று ஆண் போட்டியாளர்கள், பெண்களை அடிமைகள் போல மிதித்து தள்ளிவிட்டு முன்னேறுகின்றனர் என்று கூறுகிறார்.  இந்தக் கருத்தினை ஏற்காத தர்ஷன், கவின், சாண்டி மூவரும் மதுமிதாவுடன் சண்டையிடுகின்றனர். சண்டையின்போது லோஸ்லியா கவினின் அதையும் தாண்டி புனிதமானதைப் பற்றி பேசினார் மதுமிதா. கவினைப் பற்றிப் பேசியதைப் பொறுக்க முடியாத கவினின் தோழி லோஸ்லியா மதுமிதாவிடம் சண்டையிடுகிறார்.


மதுமிதா தன்னுடைய நட்பினைப் பற்றிப் பேசியதைக் கேட்ட கவின் கதறி அழுவதுபோல ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

அப்போது, பிக்பாஸ் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரியிடம் இதுபற்றி முறையிடுகிறார் சாண்டி. நேற்றுதான் கவின் கஸ்தூரியை மரியாதை இல்லாமல் காக்கா என்று பட்டப் பெயர் வைத்து புறணி பேசினார். சாண்டியும் கஸ்தூரியை சாத்தான் என்றே சொல்லி வந்தார்.

அப்படி இருக்கையில் சாண்டி இன்றைய பிரச்னைக்கு அவரிடம் நியாயம் கேட்டதனை பலரும் விமர்சித்துள்ளனர். நேற்றுவரை அவரைப் பற்றி மோசமாக சாத்தான் என்று புறணி பேசி வந்த நீங்கள் இன்று அவரிடம் முறையிடுகிறீர்களா? என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

From around the web