மோகன் வைத்யா வெளியேற்றத்தால் வருந்தும் சாண்டி மற்றும் கவின்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாரயிறுதி நாட்கள் வழக்கப்படி நடைபெற்ற எலிமினேஷனில், குறைவான வாக்குகளை பெற்றதை காரணம் காட்டி மோகன் வைத்யா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனின் காரசாரமான விமர்சனங்களுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து எலிமினேஷனுக்கான அறிவிப்பை கமல் வெளியிட்டார். அதில், மோகன் வைத்தியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி சென்றாலே அழும் மோகன் வைத்யா, தான் வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்றதும் கதறிவிட்டார். எனினும், தன்னுடைய வெளியேற்றம் சாண்டி, கவினால் நிகழ்ந்தது என
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாரயிறுதி நாட்கள் வழக்கப்படி நடைபெற்ற எலிமினேஷனில், குறைவான வாக்குகளை பெற்றதை காரணம் காட்டி மோகன் வைத்யா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனின் காரசாரமான விமர்சனங்களுடன் தொடங்கியது.

மோகன் வைத்யா வெளியேற்றத்தால் வருந்தும் சாண்டி மற்றும் கவின்..!

அதை தொடர்ந்து எலிமினேஷனுக்கான அறிவிப்பை கமல் வெளியிட்டார். அதில், மோகன் வைத்தியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி சென்றாலே அழும் மோகன் வைத்யா, தான் வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்றதும் கதறிவிட்டார். 

எனினும், தன்னுடைய வெளியேற்றம் சாண்டி, கவினால் நிகழ்ந்தது என மிகவும் சோகத்துடன் கூறினார். இதற்கு அவர்கள் இருவரும் மோகன் வைத்யாவிடம் மன்னிப்பு கோரினர். எனினும், அதை ஏற்காது அவர் இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவருடனும் அகம் டிவி வழியே அவர் பேசினார். பிக்பாஸ் வீட்டையும், சாண்டி உள்ளிட்ட போட்டியாளர்களையும் எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பேன் என்று மேடையில் பேசினார் அவர். அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் அவர் தெரிவித்தார். 

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்ற உரையாடலில், அவர் எலிமினேட் ஆனதை நினைத்து சாண்டி மற்றும் கவின் இருவரும் வருத்தப்பட்டனர்.

From around the web