சனம் ஷெட்டியை வச்சு செஞ்ச பாலாஜி: கதறி அழுத சனம்

 

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியை பாலாஜி வச்சு செய்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக தங்கம் சேகரித்த குழுவினர் அந்த வீட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் என்று பிக்பாஸ் கூறினார். இதனை அடுத்து பாலாஜி, அர்ச்சனா உள்பட 8 பேர் அடங்கிய குழு அதிகாரத்தை கைப்பற்றியது. எனவே அந்த குழுவினர் சொல்வதை மற்ற போட்டியாளர்களை நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியதால் சனம்ஷெட்டியை வச்சு செய்யும் வகையில் பாட்டு பாட வேண்டும், முந்திரிக்கொட்டை போல பேச மாட்டேன் என்று கூற வேண்டும் என்றும் நடனமாடவேண்டும் என்றும் சனம் ஷெட்டியை பாலாஜி வச்சு செய்தார் 

மேலும் ஷிவானியையும் ரம்யாவையும் பாட வேண்டும், ஆட வேண்டும் என்று அர்ச்சனா கூறினார். இந்த டாஸ்க்கை மற்றவர்கள் எளிதாக எடுத்து கொண்டாலும் சனம்ஷெட்டி கொஞ்சம் சீரியஸாக எடுத்து கொண்டார். பாலாஜி கூறிய போதெல்லாம் செய்துவிட்டு அதன் பின்னர் தன்னை பாலாஜி கேலி செய்ததாகவும் கிண்டல் செய்ததாகவும் அழ ஆரம்பித்து விட்டார். அவரை பாலாஜி அனிதா உள்பட போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினார். இருப்பினும் சனம்ஷெட்டி மேல் ஏற்கனவே இருந்த கோபத்தை பழிதீர்க்கும் வகையில் பாலாஜி நேற்று நடந்து கொண்டதாகவே சனம் கருதி வருகிறார்

அதேபோல் நேற்று அர்ச்சனா, பாலாஜி மோதல் உச்சகட்டத்தை அடைந்து அதன்பின் முடிவுக்கு வந்தது. திடீரென தாய்ப்பாசம் பொத்து கொண்டு வந்தால் பாலாஜி சமாதானம் ஆனார். ஆனாலும் அவர் மீண்டும் அர்ச்சனாவுடன் மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web