காதலரை முதன் முறையாக அறிமுகப்படுத்திய சனம்

காயங்கள் நிறைந்த வாழ்க்கையில் நீ தான் என் சந்தோஷம் மோனே என தெரிவித்துள்ளார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாளராக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. 

காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூட #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

நடிகர் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டிக்கு 2019-ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஜூன் மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தர்ஷன் திருமணத்தை நிறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது  15 லட்சத்திற்கு மேல் தான் அவருக்காக செலவு செய்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பின்பு ஏமாற்றி விட்டதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுதே இந்த வலிகளை எல்லாம் மறக்க வைத்த ஒரு நண்பர் தனக்கு இருக்கிறார் என்றும் அது நட்புக்கு மேலான உறவு என்றும் அவருடைய பெயர் மோனே என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. தற்போது சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். 

அதில் ஒருவரின் கையை பிடித்தவாறு அவரை வாஞ்சையுடன் பார்த்திருக்கும் சனம், "எனது உலகத்தை நீதான் பிரகாசிப்பிக்கிறாய் மோனே. இந்த அழகான காதலர் தின விருந்திற்காக நன்றி" என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web