ஆரிக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுக்கும் சனம்!...

ஆரிக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுக்கும் சனம்!...
 

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதேபோல் ஆரிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். 

இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஆரியும் சனம் ஷெட்டியும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் பிக்பாஸ்க்கு பிறகு ஆரிக்கு வாழ்த்து பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். 

அந்த பதிவிற்கு பதில் பதிவு வெளியிட்ட ஆரி சனம் ஷெட்டியை "உண்மையான போராளி" என்று கூட கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் ஆரி தனது பிறந்த நாளை பிப்ரவரி 12-ம் தேதி அன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரது பிறந்தநாளுக்கான அழகிய Common DP-யை அவரது நண்பரான நடிகை சனம் ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ளார். 

அவர் கூறும் பொழுது "சகோதரர் ஆரியின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிறந்த நாளுக்கான Common DP-யை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் இன்று இரண்டு கொண்டாட்டம் வேற இருக்கிறது. காரணம் இன்று அவரது மகள் ரியாவின் பிறந்த நாளும் கூட" என்று கூறியுள்ளார்.


 

From around the web