இவரா பொதுவானவர் மீம்ஸ் போட்டு சமுத்திரக்கனியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு உள்ளிட்ட படங்களை சமுத்திரக்கனி இயக்கி இருந்தாலும், அவர் புகழ் அடைந்தது என்னவோ அவர் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த பிறகுதான். அதன் பிறகு மிகவும் புகழடைந்தது அவரின் நாடோடிகள் படத்தில்தான். சிறப்பான முறையில் நாடோடிகள் படத்தை எழுதி இயக்கி இருந்தார். சமுத்திரக்கனி படத்தில் எப்போதும் அறிவார்ந்த கருத்துக்கள் ஆழ்ந்த அறிவுரைகள் இடம்பெறும் அவரின் நாடோடிகள், அப்பா, நிமிர்ந்து நில் என எந்த படமும் கருத்துக்கள் சொல்லாமல் இருந்ததில்லை. சமுத்திரக்கனியின் கருத்துக்கள் பொதுவானது போல்
 

உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு உள்ளிட்ட படங்களை சமுத்திரக்கனி இயக்கி இருந்தாலும், அவர் புகழ் அடைந்தது என்னவோ அவர் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த பிறகுதான். அதன் பிறகு மிகவும் புகழடைந்தது அவரின் நாடோடிகள் படத்தில்தான். சிறப்பான முறையில் நாடோடிகள் படத்தை எழுதி இயக்கி இருந்தார்.

இவரா பொதுவானவர் மீம்ஸ் போட்டு சமுத்திரக்கனியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சமுத்திரக்கனி படத்தில் எப்போதும் அறிவார்ந்த கருத்துக்கள் ஆழ்ந்த அறிவுரைகள் இடம்பெறும் அவரின் நாடோடிகள், அப்பா, நிமிர்ந்து நில் என எந்த படமும் கருத்துக்கள் சொல்லாமல் இருந்ததில்லை. சமுத்திரக்கனியின் கருத்துக்கள் பொதுவானது போல் இருந்தாலும் பல கருத்துக்களில் கம்யூனிசம் தழுவி இருந்தது உண்மை.

இருப்பினும் தீவிர கம்யூனிச ஆதரவாளரான ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களை சொன்னாலும் அதில் கம்யூனிச வாடை அடிக்காமல் இருந்ததில்லை.

இப்போது மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு வெங்கடேசனுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு கேட்பதன் மூலம் அவர் தீவிர கம்யூனிஸ்ட் என்பதை உறுதி செய்துள்ளார்.

நெட்டிசன்களும் சமுத்திரக்கனியை திமுக லிஸ்ட்டில் சேர்த்துவிட்டு விட்டனர் அவர் திமுக காரர் அதனால்தான் அவர் கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பொதுவான நபர் போல் தன்னை காட்டிக்கொண்ட சமுத்திரக்கனி இப்படி ஒரு கட்சிக்கு ஆதரவாக தனிப்பட்ட முறையில் ஏன் பிரச்சாரம் செய்கின்றார் என மீம்ஸ்கள் மூலம் கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web