நாளை வருகிறது பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி ரைட்டர் 

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'ரைட்டர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 
 
நாளை வருகிறது பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி ரைட்டர்

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரக்கனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் யாவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. ஹலிதா சமீம் இயக்கிய புத்தம் புது காலை, ஏலே திரைப்படங்களில் முற்றிலும் வேறுபட்ட சமுத்திரக்கனியாக தோன்றி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமுத்திரக்கனி.

பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கு இந்த திரைப்படத்திற்கு ’ரைட்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளிவரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தை பிராங்க்ளின் ஜோசப் என்பவர் இயக்க இருப்பதாகவும் கோவிந்த் வசந்தா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'அந்தகன்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயக்குமார் நடிக்கிறார். 


 

From around the web