ஸ்டைலில் ரஜினியை மிஞ்சிய சமீராவின் மகள் நைரா!!

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. அதைத் தொடர்ந்து அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பின்பு வந்த நடிகைகள் இவரை ஓவர் டேக் செய்துவிட்டனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை, வாரணம் ஆயிரம் தவிர மற்ற படங்கள் தோல்வியினை சந்திக்க திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார், 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே
 
ஸ்டைலில் ரஜினியை மிஞ்சிய சமீராவின் மகள் நைரா!!

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. அதைத் தொடர்ந்து  அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பின்பு வந்த நடிகைகள் இவரை ஓவர் டேக் செய்துவிட்டனர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை, வாரணம் ஆயிரம் தவிர மற்ற படங்கள் தோல்வியினை சந்திக்க திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்,

ஸ்டைலில் ரஜினியை மிஞ்சிய சமீராவின் மகள் நைரா!!

2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார்.  அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு இரண்டாவது குழந்தையாக நைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

முதல் பிரசவத்திற்குப் பின்னர் உடல் எடை கூடிப் போனதால் சினிமாவிற்கு மொத்தமாக முழுக்குப் போட்ட இவர், தற்போது முழு நேரத் தாயாக மாறி இருக்கிறார். பிசியான அம்மாவாக வலம்வரும் அவர் அவ்வப்போது குழந்தைகள் செய்யும் சேட்டைகளைப் புகைப்படங்களாகப் பதிவிட்டு வருகிறார்.

தற்போது நைரா ஸ்டைலாக ரஜினிபோல் கூலிங் கிளாஸ் போடும் வீடியோ ஒன்றினை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அம்மாடியோவ் என்ன ஒரு ஸ்டைல் என்று கியூட்டியைப் பாராட்டி வருகின்றனர்.

From around the web