சமீரா ரெட்டி குழந்தைகள் கணவர் என அனைவருக்கும் கொரோனா!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமீரா ரெட்டி. அவருக்கு மட்டும் அல்ல கணவர், மகன், மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
 
சமீரா ரெட்டி குழந்தைகள் கணவர் என அனைவருக்கும் கொரோனா!

தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சமீரா ரெட்டி சமூக வலைதளத்தில் தெரிவித்தார். சமீராவின் கணவர் அக்ஷய் வர்தே, மகன் ஹன்ஸ், மகள் நைராவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

சமீராவின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்ததுடன் அப்டேட் கேட்டார்கள். இந்நிலையில் சமீரா ரெட்டி அப்டேட் கொடுத்திருக்கிறார்.

தன் பிள்ளைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிாரமில் வெளியிட்டு சமீரா கூறியிருப்பதாவது,

ஹன்ஸ் மற்றும் நைரா பற்றி பலர் கேட்கிறார்கள். அதனால் இதோ அப்டேட். கடந்த வாரம் ஹன்ஸுக்கு பயங்கர காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, வயிற்றுப் போக்கு, சோர்வு இருந்தது. நான்கு நாட்கள் அப்படி இருந்தது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்தது.

இதையடுத்து நான் பதட்டம் அடைந்தேன். ஹன்ஸை அடுத்து நைராவுக்கு அறிகுறிகள் ஏற்பட்டது. அவளுக்கு காய்ச்சலும், வயிற்றுப் போக்குமாக இருந்தது. பாரசிட்டமால் கொடுத்தேன். இரண்டாம் அலையால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் முக்கியமான விஷயம். ஆனால் பலருக்கு லேசான அறிகுறிகள் ஏற்படுவதாக டாக்டர்கள் நம்புகிறார்கள்.

வைட்டமின் சி, மல்டிவைட்டமினை டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

என் பிள்ளைகள் சவுகரியமாக உணரத் தேவையான அனைத்தையும் செய்தேன். தற்போது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். சில நாட்களில் குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லாமல் போனாலும் இதுவரை பாதிப்பு ஏற்படாமல் இருப்பவர்களுக்கு பரவாமல் இருக்க அவர்களை 14 நாட்கள் தனிமைபை்படுத்த வேண்டும்.

நல்ல வேளையாக என் மாமியாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அவர் தனியாக வசிக்கிறார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. குழந்தைகளை அடுத்து எனக்கும், அக்ஷய்க்கும் பாசிட்டிவ் என்று வந்தது. நாங்கள் மருந்து எடுத்துக் கொள்வதுடன், ஆவி பிடிப்பது, உப்புத் தண்ணீரால் கொப்பளிப்பது, மூச்சு பயிற்சி செய்வது, பிராணயாமா, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளத் துவங்கினோம்.

இந்த நேரத்தில் பயப்படக் கூடாது. உங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

From around the web