நடிப்பில் மட்டும் இல்லங்க படிப்பிலயும் சமந்தா கெட்டிக்காரிதான்!!

நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப்
 
நடிப்பில் மட்டும் இல்லங்க படிப்பிலயும் சமந்தா கெட்டிக்காரிதான்!!

நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி  என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.

நடிப்பில் மட்டும் இல்லங்க படிப்பிலயும் சமந்தா கெட்டிக்காரிதான்!!

கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் வீட்டில் இருந்துவரும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிறந்தநாள் புகைப்படங்கள், அவர் நடிப்பு கற்கும் வீடியோ, தன் செல்ல நாயுடனான புகைப்படம் எனப் பதிவிட அது வைரலாவது வழக்கம்.

அந்தவகையில் சமந்தாவின் ஸ்கூல் ரிப்போட் கார்ட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த ரிப்போர்ட் கார்டினைப் பார்த்த பலரும், அம்மணி நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி கிடையாது, படிப்பிலும்தான் எனப் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். ஆமாங்க, கணக்குல 100 மார்க் எல்லாம் வாங்கிருக்கார்னா பாருங்க, எவ்ளோ படிப்பிஸ்னு. மத்த பாடத்துலயும் 80, 90 அப்டியே மார்க் எடுத்துருக்காங்க..

From around the web