அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் சமந்தாவின் படங்கள்; ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து மூன்று மாதங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இனிவரும் மூன்று மாதங்களும் கொண்டாட்டம் தான் என கூறப்படுகிறது. சமந்தா நடித்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய தெலுங்கு திரைப்படமான ரங்கஸ்தாலம் மார்ச் 30ஆம் தேதியும் விஷாலுடன் சமந்தா நடித்த இரும்புத்திரை வரும் ஏப்ரல் 14ஆம் தேதியும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான நடிகையர் திலகம் திரைப்படம் வரும் மே 9ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்கள் போக
 

சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து மூன்று மாதங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இனிவரும் மூன்று மாதங்களும் கொண்டாட்டம் தான் என கூறப்படுகிறது.

சமந்தா நடித்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய தெலுங்கு திரைப்படமான ரங்கஸ்தாலம் மார்ச் 30ஆம் தேதியும் விஷாலுடன் சமந்தா நடித்த இரும்புத்திரை வரும் ஏப்ரல் 14ஆம் தேதியும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான நடிகையர் திலகம் திரைப்படம் வரும் மே 9ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று படங்கள் போக சமந்தா நடித்து வரும் ‘சீமராஜா’, மற்றும் யூடர்ன் ரீமேக் ஆகிய படங்களும் இந்த ஆண்டே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது

From around the web