சிரஞ்சீவியுடன் இணைந்த சமந்தா: வைரலாகும் புகைப்படங்கள்!

 

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் கவிழ்ந்து விடும் என்பது தெரிந்ததே. ஆனால் திருமணத்திற்கு பின்னரும் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகை சமந்தா தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது சமந்தா தொகுத்து வழங்கி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சாம்ஜாம். இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

samantha chiranjeevi

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் விஜய்தேவரகொண்டா கலந்து கொண்ட நிலையில் அடுத்த பாகத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொள்கிறார். சிரஞ்சீவியுடன் சமந்தா உரையாடும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று நடந்தது என்பதும், இந்த படப்பிடிப்பின் இடையே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

சிரஞ்சீவியும் சமந்தாவின் மாமனார் நாகார்ஜூனாவும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் தற்போது முதன் முதலாக சிரஞ்சீவியை சமந்தா பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web