மாலத்தீவில் சமந்தாவுமா? இன்னும் எத்தனை பேர் போவிங்க!

 

பிரபல தமிழ் தமிழ் சினிமா நடிகைகள் பலர் தற்போது மாலத்தீவில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்றுள்ள நிலையில் நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா மற்றும் ரகுல் பிரீதி சிங் ஆகியோர்களும் விடுமுறையை கழிப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ளனர் 

மாலத்தீவு சென்றுள்ள நடிகைகள் விதவிதமான அழகான கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பதிவு செய்து வருகின்றனர் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்த முதுகு தெரியும் வகையில் உடை அணிந்த சமந்தாவின் இந்த புகைப்படம் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய அழகிய நீல வானத்தோடு காட்சியளிக்கிறது 

சமந்தா தற்போது சாம்ஜாம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பதால் இப்போது அவர் மாலத்தீவில் செல்லவில்லை என்பதும் இந்த புகைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாலத்தீவு சென்ற போது எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web