ராணா-மிஹிகா குடும்ப புகைப்படத்தில் இருக்கும் ஒரே நடிகை!

பிரபல தெலுங்கு நடிகரும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்த ராணா டகுபதிக்கும், மிஹிகா என்பவருக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது என்பது தெரிந்ததே. ஊரடங்கு நேரம் என்பதால் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பதும் அதாவது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முக்கியமானவர்கள் என மொத்தம் 50 பேர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் திருமண புகைபடங்கள்
 

ராணா-மிஹிகா குடும்ப புகைப்படத்தில் இருக்கும் ஒரே நடிகை!

பிரபல தெலுங்கு நடிகரும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்த ராணா டகுபதிக்கும், மிஹிகா என்பவருக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது என்பது தெரிந்ததே.

ஊரடங்கு நேரம் என்பதால் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பதும் அதாவது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முக்கியமானவர்கள் என மொத்தம் 50 பேர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் திருமண புகைபடங்கள் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராணா-மிஹிகா திருமணத்தில் கலந்து கொண்ட மிகச் சிறந்த திரையுலக நட்சத்திரங்களில் நடிகை சமந்தாவும் ஒருவர் என்பதும், சமந்தாவுக்கும் அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் ராணா அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் இந்த அழைப்பின் பேரில் இருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் ராணா-மிஹிகா குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தில் இருந்த ஒரே நடிகை சமந்தா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டு தங்களது குடும்பத்தில் மிஹிகாவை வரவேற்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

From around the web