வீட்டிலேயே விவசாயம் பண்ணும் சமந்தா… மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்குறார்!!

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். சினிமாக்களில் பிசியாக இருக்கும் அளவு நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் பிசிதான். தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்களுடன் அவ்வப்போது புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவை பின்
 
வீட்டிலேயே விவசாயம் பண்ணும் சமந்தா… மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்குறார்!!

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.

வீட்டிலேயே விவசாயம் பண்ணும் சமந்தா… மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்குறார்!!

சினிமாக்களில் பிசியாக இருக்கும் அளவு நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் பிசிதான். தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்களுடன்  அவ்வப்போது புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவிட்டு வருகிறார். 

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடி ஆகியுள்ளதாக அவர் கூறி,  மேலும் அதனை ஒரு கொண்டாட்டம்போல் தன் வீட்டில் கொண்டாடி அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அந்த கொண்டாட்டத்தில் மற்றவர்கள் இணைய வேண்டும் என எண்ணி, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, முட்டைகோஸை எப்படி  வளர்த்து அறுவடை செய்வது என ஸ்டெப் பை ஸ்டெப்பாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு தான் வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இனி சமந்தாவோட டிப்ஸ் ஃபாலோ பண்ணி வீட்டிலேயே, எல்லோரும் விவசாயம் பண்ணலாம் வாங்க.

From around the web