ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பிக்பாஸில் சமந்தா: செம ரெஸ்பான்ஸ்

 

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது

இந்த நிலையில் இந்த சீசனை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று இருப்பதை அடுத்து, சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் சமந்தா தொகுத்து வழங்குவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 

அதன்படி நேற்று சமந்தா தொகுத்து வழங்கும் காட்சிளின் புரோமோ வீடியோ ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சமந்தா ஆட்டம் பாட்டத்துடன் ஜாலியாக தொகுத்து வழங்கும் காட்சிகள் புரமோவில் உள்ளது. மேலும் போட்டியாளர்களுடன் ஜாலியாக பேசிய காட்சிகளும், போட்டியாளர்கள் முன் சமந்தா நடனமாடிய காட்சிகளும் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web