ஷிவாங்கியின் Crush Feelingsக்யூட்டாக இருக்கு... மனம் திறந்த சாம் விஷால்

"சாம் விஷாலை காதலிக்கிறீர்களா? "இல்லைங்க இல்லை. எத்தனை தடவை சொல்வது தன் ஸ்டைலில்  சிரித்துக்கொண்டே கூறுகிறார் ஷிவாங்கி
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக ஷிவாங்கிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அவர் அஸ்வினுக்காக செய்யும் குறும்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் முன்பு ஒருநாள் லைவ்வில் வந்த ஷிவாங்கியடம் ரசிகர்கள் சிலர், சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலை பற்றி சொல்லுங்க என்று கேட்டபொழுது, "அவர் என்னுடைய நெருங்கிய தோழர். Boybestie  என்று சொல்வார்களே அதுபோல. எதுவா இருந்தாலும் அவரிடம் பகிர்ந்து கொள்ளுவேன். வெளியே செல்வது என்றாலும் அவருடைய நண்பர்களையும் அழைத்து செல்வேன். ஜாலியாக இருக்கும்" என்பது போல் கூறியுள்ளார். "சாம் விஷாலை காதலிக்கிறீர்களா?"என்பது போல சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துள்ள ஷிவாங்கி  சிரித்துக்கொண்டே "இல்லைங்க இல்லை. எத்தனை தடவை சொல்வது நிறையபேர் இன்ஸ்டாகிராமில் கூட வந்து "ஒருவேளை அப்படி இருக்குமோ' என்று கேட்கிறார்கள். இல்லவே இல்லை" என்று தன் ஸ்டைலில்  சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.

எனவே இதுபற்றி தற்போது சாம் விஷால் மனம் திறந்துள்ளார். அவர் கூறும் பொழுது "சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் என்னவோ அஸ்வின் ஷிவாங்கி இருவருக்கும் எதிர்த்து நிற்பவன் போல கற்பனை செய்து கொள்கிறார்கள். எனக்குமே அவர்களை மிகவும் பிடிக்கும். ஷிவாங்கியின் அந்த Crush Feelings  மிகவும் க்யூட்டாக இருக்கும். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்" என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

From around the web