பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகருக்கு 250 கோடி சம்பளம்? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகருக்கு ரூபாய் 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாக கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே. முதல் சீசனுக்கு 50 கோடி ரூபாயும், 2வது சீசனுக்கு 75 கோடி ரூபாயும், மூன்றாவது சீசனுக்கு 150 கோடி ரூபாயும், கமலஹாசனுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகருக்கு 250 கோடி சம்பளம்? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகருக்கு ரூபாய் 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாக கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே. முதல் சீசனுக்கு 50 கோடி ரூபாயும், 2வது சீசனுக்கு 75 கோடி ரூபாயும், மூன்றாவது சீசனுக்கு 150 கோடி ரூபாயும், கமலஹாசனுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானுக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது, 3, 4 மற்றும் 7 வது சீசன் முதல் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

நான்கு மற்றும் ஐந்தாவது சீசனுக்கு அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அவர் ஒவ்வொரு சீசனுக்கும் தனது சம்பளத்தை உயர்த்தியதாகவும், 9 வது சீசனில் 100 கோடி சம்பளம் வாங்கியதாகவும், தற்போது ஒளிபரப்பாக உள்ள 14 வது சீசனில் ரூபாய் 250 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த சம்பள தொகையை பார்த்து பாலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது

From around the web