நாணயம் முடித்து நாலு வருடம் கஷ்டப்பட்டேன் – சக்தி செளந்தர்ராஜன்

இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் படங்கள் எல்லாமே வித்தியாசமான படங்களாகும். சயின்ஸ் பிக்சன், விஞ்ஞான படங்கள், ஹாலிவுட் படங்கள் போல நாய்களை ஹீரோ ரேஞ்சில் வைத்து கதை சொல்லிய படங்கள், பேங்க் கொள்ளை பற்றிய நுணுக்கங்களுடன் வெளியான நாணயம் உள்ளிட்ட அவரின் படங்களை சொல்லிக்கொண்டே செல்லலாம். திண்டுக்கம் பக்கம் ஒரு மலைக்கிராமத்தில் இருந்து கொடைக்கானல் கான்வெண்டிலேயே படித்ததால் ஆங்கிலம் பேசுவதில் இவர் எக்ஸ்பர்ட்டாம். சிறு வயதில் சினிமா போஸ்டரை பார்த்து பார்த்துதான் தமிழை எழுத்துக்கூட்டி வாசித்து தமிழ் கற்றுக்கொண்டாராம்.
 

இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் படங்கள் எல்லாமே வித்தியாசமான படங்களாகும். சயின்ஸ் பிக்சன், விஞ்ஞான படங்கள், ஹாலிவுட் படங்கள் போல நாய்களை ஹீரோ ரேஞ்சில் வைத்து கதை சொல்லிய படங்கள்,

நாணயம் முடித்து நாலு வருடம் கஷ்டப்பட்டேன் – சக்தி செளந்தர்ராஜன்

பேங்க் கொள்ளை பற்றிய நுணுக்கங்களுடன் வெளியான நாணயம் உள்ளிட்ட அவரின் படங்களை சொல்லிக்கொண்டே செல்லலாம்.

திண்டுக்கம் பக்கம் ஒரு மலைக்கிராமத்தில் இருந்து கொடைக்கானல் கான்வெண்டிலேயே படித்ததால் ஆங்கிலம் பேசுவதில் இவர் எக்ஸ்பர்ட்டாம். சிறு வயதில் சினிமா போஸ்டரை பார்த்து பார்த்துதான் தமிழை எழுத்துக்கூட்டி வாசித்து தமிழ் கற்றுக்கொண்டாராம்.

சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி நாசர், வெங்கட் பிரபு , மிஷ்கின் உள்ளிட்ட இயக்குனர்களிடம் அசிஸ்டண்ட் ஆக வேலை பார்த்து வந்த இவர் நாய்கள் ஜாக்கிரதை படத்துக்கு பின்னரே அனைவருக்கும் தெரிந்த இயக்குனர் ஆனார்.

மிகவும் கஷ்டப்பட்டு இவர் இயக்கிய முதல் திரைப்படம் நாணயம். படம் நன்றாக இருந்தாலும் குறைந்த ஸ்க்ரீன்களே கிடைத்ததால் படம் பெரிதாக போகவில்லையாம். இதில் எஸ்.பி.பிக்கு வித்தியாசமான ரோல்.

நல்ல படத்தை கொடுத்த பிறகும் நான் நான்கு வருடத்துக்கும் மேல் கஷ்டப்பட்டேன் சரியான கதை அமையவில்லை. செலவுக்கு கூட பணம் இல்லாத நிலை அந்த நேரத்தில் என் திருமணம் நடக்க இருந்த நிலையில் சத்யராஜ் சாரிடம் கதை சொல்லி சிபிராஜை வைத்து நான் இயக்கிய நாய்கள் ஜாக்கிரதைதான் அவருக்கு திருப்புமுனையை தந்தது என கூறியுள்ளார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் டிக் டிக் டிக். ஜோம்பி படமான மிருதனும் இவர் இயக்கிய படம் ஆகும்.

From around the web