கவின் மற்றும் லோஸ்லியாவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர். டி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது. வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல் கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு
 
கவின் மற்றும் லோஸ்லியாவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.

டி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது.

கவின் மற்றும் லோஸ்லியாவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சாக்ஷி!


வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல்  கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதன்பின்னர் கவினும், சாண்டியும் பிரியாவிடைப் பாடலை நாமினேட் ஆனவர்களுக்காகப் பாடினர்.

அவர்கள் பாடும்போதே அவர்களுடைய ஆர்டரில் பாடுவதாகக் கூறி, ஷாக்சியைப் பற்றி முதலில் பாடினார்கள், சாக்ஷி எலிமினேட் ஆகிவிட்டார் என்று கூறி வெளியே செல்லும்போதும் கூட சாக்ஷியே தானாக முன்வந்து கவின் மற்றும் லோஸ்லியாவிற்கு விடை கொடுத்தார்.

ஆனால் கவினோ சாக்ஷிதான் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கான முதல் பாடலைப் பாடினார். லோஸ்லியா காப்பாற்றப்பட்டார் என்று கூறிய போதும் கூட, சாக்ஷி லோஸ்லியாவிற்கு வாழ்த்துகள் கூறினார்.

வெளியேறிய பின்னரும் கவின் ஷாக்சி அழவில்லை என்பது குறித்து புறணி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web