ஷெரினுக்கு நட்புக் கவிதை சொன்ன சாக்ஷி!!

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. இங்கே வந்த உங்களுடைய நண்பர்கள் 4 பேர் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது தவறு என்று ஷெரின் கூறினார். ஆனால் மர மண்டை கவின் சொன்னதையே சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணிக் கொண்டிருந்தார். அதனையடுத்து தலையணை செய்யும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க்கிற்காக இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. அந்த டாஸ்க் முடிவில் 3 மந்திர பொம்மைகள்
 
ஷெரினுக்கு நட்புக் கவிதை சொன்ன சாக்ஷி!!

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. இங்கே வந்த உங்களுடைய நண்பர்கள் 4 பேர் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது தவறு என்று ஷெரின் கூறினார். ஆனால் மர மண்டை கவின் சொன்னதையே சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணிக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து தலையணை செய்யும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க்கிற்காக இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது.

ஷெரினுக்கு நட்புக் கவிதை சொன்ன சாக்ஷி!!

அந்த டாஸ்க் முடிவில் 3 மந்திர பொம்மைகள் கொடுக்கப்பட்டது, அதை பாதுகாக்குமாறு பிக் பாஸ் கூற, பத்திரமாக வைத்திருந்தனர். அதன்பின்னர் அந்த பொம்மைகளை கன்ஃபெஷன் ரூமுக்குள் வைத்தனர்.

அந்த மந்திர பொம்மைகள் கொடுத்த 3 வரங்கள் வெளியே காத்திருக்கிறது என்று கூற, அதனை வெளியே சென்று ஆர்வமாகப் பார்த்தனர். அப்போது அபிராமி, ஷாக்சி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்தனர்.

உள்ளே நுழைந்த சாக்ஷி ஷெரினிடம் நீ ஜெயிக்க வேண்டும் என்று கூறினார். இருவரும் பாசத்தால் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது பாசத்தில் ஷெரினைப் பற்றி கவிதை ஒன்றைக் கூறினார் ஷாக்சி..
பூக்கள் என்றால் வாசம் 
அம்மா அப்பா என்றால் பாசம் 
காதல் என்றால் நேசம் 
ஆனால், ஷெரின் உனது நட்பு என் சுவாசம்

என பாசம் பொங்க பாடினார், ஷாக்சி ஷெரின்மீது கொண்டிருக்கும் அன்பினை இப்போதாவது தர்சன் புரிந்துகொண்டால் நன்று.

From around the web