கொலைப் பழியை மதுமிதா மீது போட்ட சாக்ஷி

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2 ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரத்தின் தலைவியாக நடிகை அபிராமி, இந்த வாரம் வீட்டின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் எலிமினேஷன் நடந்தது. மதுமிதா, மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் அதிக வாக்குகளுடன் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குக்காக புதிய கொடூரக் கொலை டாஸ்க்
 

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில்,  2 ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 

மூன்றாவது வாரத்தின் தலைவியாக நடிகை அபிராமி, இந்த வாரம் வீட்டின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் எலிமினேஷன் நடந்தது. மதுமிதா, மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் அதிக வாக்குகளுடன் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

கொலைப் பழியை மதுமிதா மீது போட்ட சாக்ஷி


லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குக்காக புதிய கொடூரக் கொலை டாஸ்க் கொடுப்பட்டது. அந்தவகையில், நேற்று முன் தினம் நடந்த இந்த டாஸ்க்கில் வேடிக்கையான முறையில் சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்தியா கொல்லப்பட்டனர். 

அதே டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. அதன்படி, தர்ஷன் ஷெரீனுக்கு முத்தம் கொடுத்து கொலை செய்தார். அதேபோல, முகின் ராவ் ரேஷ்மா மீது கோல்டு காபியை கொட்டி அவரை கொலை செய்தார். இதன்மூலம் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வனிதா மற்றும் முகின் ராவ் இருவரும் கொலைகளை செய்து முடித்துள்ளனர். தவிர, இந்த கொலைகள் நடப்பதற்கு காரணம் லோஸ்லியா மற்றும் மதுமிதா தான் காரணம் என்று ரேஷ்மா, சாக்‌ஷி, மோகன் வைத்தியா, ஷெரீன் ஆகியோர் மனங்களிலும் நம்புகின்றனர்.

இதனால் மதுமிதாவுடன் லாஸ்லியாவைப் பற்றியும் புறம் பேசுகின்றனர் வனிதா அண்ட் டீம்.

From around the web