ரசிகர்களுக்கு சாக்சி அகர்வால் கொடுத்த பர்த்டே கிஃப்ட்!

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் மாடர்ன் உடையை விட சேலையில் தான் மிகவும் அழகாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததால் தன்னுடைய பிறந்த நாள் பரிசாக சேலையுடன் கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்களுக்கு
 

ரசிகர்களுக்கு சாக்சி அகர்வால் கொடுத்த பர்த்டே கிஃப்ட்!

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் மாடர்ன் உடையை விட சேலையில் தான் மிகவும் அழகாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததால் தன்னுடைய பிறந்த நாள் பரிசாக சேலையுடன் கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்களுக்கு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்

தன்னை பாலோ செய்யும் தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு இந்த புகைப்படம் ஒரு பரிசாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்களின் அன்பு தன்னை திக்குமுக்காட வைத்ததாகவும், ரசிகர்களுக்கு அன்புக்கு தான் கட்டுப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த கொரோனா வைரஸ் காலத்தில் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க தான் இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகில் அன்பை விட மிகவும் பெரியது எதுவும் இல்லை என்றும், அந்த அன்பை சக மனிதர்களிடத்தில் காண்பியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web