சுந்தர் சி அடுத்த படத்தின் முக்கிய பணியை முடித்த சாக்சி அகர்வால்!

 

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்றுதான் சுந்தர் சி இயக்கி வரும் ’அரண்மனை 3’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

sakshi

இந்த நிலையில் ’அரண்மனை 3’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சாக்ஷி அகர்வால் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை கடந்த இரண்டு நாட்களாக செய்ததாகவும் தற்போது அந்த பணியை முடித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web