சூர்யாவுக்காக டாக்டர் பட்டத்தை இழந்தேன்: சாய்பல்லவி

பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய்பல்லவி ஒரு டாக்டர் என்பது பலருக்கு தெரியாது. ஜார்ஜியாவில் டாக்டர் படிப்பை முடித்த சாய்பல்லவி, இந்தியா திரும்பி டாக்டர் தொழிலை செய்ய முடிவு செய்தபோதுதான் அவருக்கு திடீரென ‘பிரேமம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் டாக்டர் தொழிலுக்கு செல்ல முடிவு செய்திருந்த சாய்பல்லவி, இந்த பட்ம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஹிட்டானதால் நடிப்பை முழுநேர தொழிலாக்கிவிட்டார் குறிப்பாக சூர்யாவுடன் ‘என்.ஜி.கே. படத்தில் நடிக்க வாய்ப்பு
 

பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய்பல்லவி ஒரு டாக்டர் என்பது பலருக்கு தெரியாது. ஜார்ஜியாவில் டாக்டர் படிப்பை முடித்த சாய்பல்லவி, இந்தியா திரும்பி டாக்டர் தொழிலை செய்ய முடிவு செய்தபோதுதான் அவருக்கு திடீரென ‘பிரேமம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் டாக்டர் தொழிலுக்கு செல்ல முடிவு செய்திருந்த சாய்பல்லவி, இந்த பட்ம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஹிட்டானதால் நடிப்பை முழுநேர தொழிலாக்கிவிட்டார்

குறிப்பாக சூர்யாவுடன் ‘என்.ஜி.கே. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் டாக்டர் தொழிலை ஒரேயடியாக கைகழுவ முடிவு செய்துவிட்டாராம். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சாய்பல்லவி கூறியுள்ளார். தற்போது சாய்பல்லவி, தனுஷின் ‘மாரி 2, மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் மற்றும் ஒரு தெலுங்கு படம் என பிசியாக நடித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web