ரஜினியை மறைமுகமாக தாக்கிய விஜய் தந்தை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் வன்முறையாக மாறியதாகவும், மக்கள் போராடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்தை அவருக்கு பிடிக்காதவர்கள் அவரவர் இஷ்டம் போல் திரித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் ஆடியோ விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினியை மறைமுகமாக
 

ரஜினியை மறைமுகமாக தாக்கிய விஜய் தந்தை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் வன்முறையாக மாறியதாகவும், மக்கள் போராடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்தை அவருக்கு பிடிக்காதவர்கள் அவரவர் இஷ்டம் போல் திரித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் ஆடியோ விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினியை மறைமுகமாக தாக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். அவர் பேசியதாவது:

ரஜினியை மறைமுகமாக தாக்கிய விஜய் தந்தைடிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” என்று கூறினார்.

From around the web