சாமி 2 திரைவிமர்சனம்

விக்ரம் த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கிய சாமி திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் முதல் பாகத்தின் இறுதியில் வில்லன் பெருமாள்பிச்சையை சாமி கொலை செய்துவிடுவார் அல்லவா? இதனையறிந்த பெருமாள்பிச்சையின் மகன் பாபிசிம்ஹா, சாமியையும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியுமான ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்கிறார். ஐஸ்வர்யா இறந்து அரை மணி நேரம் கழித்து
 

சாமி 2 திரைவிமர்சனம்விக்ரம் த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கிய சாமி திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்

முதல் பாகத்தின் இறுதியில் வில்லன் பெருமாள்பிச்சையை சாமி கொலை செய்துவிடுவார் அல்லவா? இதனையறிந்த பெருமாள்பிச்சையின் மகன் பாபிசிம்ஹா, சாமியையும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியுமான ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்கிறார். ஐஸ்வர்யா இறந்து அரை மணி நேரம் கழித்து பிறகு பிறக்கும் மகன் விக்ரம் வளர்ந்து ஐபிஎஸ் அதிகாரியாகி தன்னுடைய பெற்றோர்களை கொலை செய்த பாபிசிம்ஹாவையும் அவரது சகோதரர்களையும் பழிவாங்குவதுதான் கதை

13 வருடங்களுக்கு முன் இருந்த அதே மிடுக்கு இப்போதும் விக்ரமிடம் இருப்பது உண்மையிலேயே ஒரு ஆச்சரியம்தான். ஐபிஎஸ் அதிகாரியாகவும், வில்லன் பாபிசிம்ஹாவின் திட்டங்களை முறியடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் பாபிசிம்ஹாவுடன் மோதும் காட்சிகளும் அவரது தந்தையை போலவே வித்தியாசமாக பழிவாங்கும் காட்சிகளும் சூப்பர்

சாமி 2 திரைவிமர்சனம் கீர்த்திசுரேஷை இந்த படத்தில் வீணடித்துள்ளனர். அவரது நடிப்புக்கு தீனி போடும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. விக்ரமுடன் இரண்டு பாடலுக்கு டூயட் மட்டுமே ஆகிறார்

சூரியின் காமெடி கொடூரமாக உள்ளது. தற்போது உள்ள காமெடி நடிகர்கள் ஒருபக்கம் தூள் கிளப்பி கொண்டிருக்கும் நிலையில் அரைவேக்காட்டான பழைய காமெடியை செய்து சூரி எரிச்சலை கிளப்புகிறார்.

பாபிசிம்ஹாவின் வில்லன் கேரக்டர் சூப்பராக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது நடிப்பில் ஏதோ ஒரு குறைபாடு தெரிகிறது.

த்ரிஷா இருந்த இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷால் பாதிகூட பூர்த்தி செய்ய முடியவில்லை. அவரது தோற்றமும் நடிப்பும் வெகுசுமார்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மொக்கையாக உள்ளது. பின்னணி இசை ஒரே இரைச்சல். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே ரகம்.

சாமி 2 திரைவிமர்சனம்தற்போதுள்ள பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் வித்தியாசமாக கதை சொல்லும் பாணியை இயக்குனர் ஹரி தனது திரைக்கதையில் கடைபிடிக்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன் இருந்த ஆடியன்ஸ்களுக்கும் இப்போதுள்ள ஆடியன்ஸ்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாததால் தான் பல இயக்குனர்கள் காணாமல் போய்விட்டனர். அந்த வரிசையில் ஹரியும் புதுமைக்கு மாறினால் மட்டுமே அடுத்தடுத்து அவர் தேற முடியும். கார் சேஸிங் , பாஸ்ட் பார்வேர்ட் காட்சிகள், பக்கம் பக்கமாக வசனம் பேசுவது ஆகியவற்றில் இருந்து ஹரி வெளியே வந்தால் நல்லது.

மொத்தத்தில் ‘சாமி’ விக்ரம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது இந்த ‘சாமி 2’

ரேட்டிங்: 1.5/5

From around the web