’சிகப்பு ரோஜாக்கள் 2’ படம் குறித்து பரவி வரும் தொடர் வதந்திகள்!

கமல், ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பதாக அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா ஏற்கனவே விளக்கம் அளித்து விட்ட போதிலும் யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஒரு சிலர் இந்த வதந்தைகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் 

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வதந்தியாக ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கதை கட்டி உள்ளனர். சிகப்பு ரோஜாக்கள் படத்தை மீண்டும் ரீமேக் செய்வதோ அல்லது இரண்டாம் பாகம் எடுப்பதோ தேவையில்லாத ஒன்று என்று பாரதி ராஜாவும் அவரது மகனும் ஏற்கனவே முடிவு செய்துவிட்ட நிலையில் இது குறித்த வதந்திகள் மட்டும் அவ்வப்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

அதுவும் ஏற்கனவே ’இந்தியன் 2’ ’தேவர்மகன் 2’ ஆகிய படங்களை கையில் வைத்துக் கொண்டு அதனையே முடிக்க முடியாமல் இருக்கும் கமலஹாசன், ’சிவப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவரும் செய்திகள் நகைச்சுவையின் உச்சகட்டம் என கோலிவுட்டில் பேசி வருகின்றனர் 

From around the web