10 நாளில் ரூ.15 கோடி சம்பளம்: சமந்தாவை பார்த்து ஆச்சரியப்படும் நயன்!

 

தென்னிந்திய திரையுலகில் ஒரு நடிகை அதிக சம்பளம் வாங்குகிறார் என்றால் அது நயன்தாராதான் என்பது தெரிந்ததே 

ஒரு படத்திற்கு அவர் ஐந்து முதல் ஆறு கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஒரு படத்தை முடிப்பதற்கு அவர் கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுப்பார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பத்து நாள் கால்ஷீட்டுக்கு 15 கோடி சம்பளம் சமந்தா வாங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை ஒரே ஒரு நாள் மட்டும் தொகுத்து வழங்கிய சமந்தா தற்போது ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்

’சாம் ஜாம்’ என்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பிரபலங்களை பேட்டி எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பேட்டியில் நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமந்தா 10 பிரபலங்களை பேட்டி எடுக்க உள்ளார் என்பதும் 10 நாட்களுக்கு அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நிகழ்ச்சிக்கு 1.5 கோடி வீதம் 15 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது 

நயன்தாரா கிட்டதட்ட ஒரு வருடம் வாங்கும் சம்பளத்தை அவர் பத்தே நாட்களில் வாங்கியிருப்பதாக வெளி வந்திருக்கும் தகவல் நயன்தாராவை ஆச்சரியப்பட வைத்திக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web