ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு போட்டால் ரூ.1000: வித்தியாசமான விளம்பரம்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இறுதிப் போட்டியில் 4 பேர்கள் பங்கேற்க உள்ள நிலையில் இன்னும் ஐந்து போட்டியாளர்கள் வெளியேற உள்ளனர். இந்த நிலையில் வரும் வாரங்களில் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மிக்சர் சாப்பிட்டு கொண்டும் பேசிக் கொண்டும் பொழுதை கழிக்கும் போட்டியாளர்கள் இனி அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்குகள் சேரிகரிக்க் தற்போது பார்வையாளர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தங்களுக்கு ஆதரவான போட்டியாளருக்கு வாக்குகளை சேகரிக்க பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவு செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

ramya

இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு வாக்கு அளித்தால் 11 சதவீதம் சலுகை என்று ஒரு வித்தியாசமான விளம்பரம் வைரலாகி வருகிறது. ரம்யா பாண்டியனுக்கு வாக்களித்து அந்த ஆதாரங்களுடன் வந்தால் 6 சட்டைகள் ரூபாய் 1000 என்றும்,  நான்கு சட்டைகள் ரூபாய் 1000 என்றும், 5 டீசர்ட்டூகள் ரூ.1000 என்றும் வித்தியாசமான விளம்பரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் எந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என்றாலும் இந்த விளம்பரம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web