ரூ.10 கோடியாக உயர்ந்த நயன் சம்பளம்: ஓடிடியின் மகிமை

 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 

இந்த படத்தால் ஹாட்ஸ்டார் ஓடிடி பிளாட்பாரத்திற்கு வசூல் குவிந்து வருவதாகவும் மிகப்பெரிய தொகை வருமானமாக கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் வெற்றியடைய முழுக்க முழுக்க நயன்தாரா தான் காரணம் என்ற வகையில் அவர் திடீரென சம்பளத்தை இரு மடங்கு உயர்ந்து விட்டதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது 

nayanthara

தற்போது நயன்தாரா ரூபாய் 5 கோடி சம்பளம் பெற்று வரும் நிலையில் அடுத்த படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும் அதே 5 கோடி தான் சம்பளத்தை பெற்று வருவதாகவும் கூறி வருகின்றனர்

ஒரே படம் அதுவும் ஓடிடியில் வெற்றி பெற்றதற்கே இருமடங்கு சம்பளம் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web