மிரட்டும் ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டர்...

ஆர்.ஆர்.ஆர் படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
மிரட்டும் ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டர்...

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நடித்து வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான லைகா வாங்கியுள்ள நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அத்துடன் ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோரின் கேரக்டர்களை அண்மையில் ஒவ்வொன்றாய் வெளியிட்டார்கள். இதில் ராம்சரண் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கேரக்டரில் நடிப்பதாக அண்மையில் ஒரு போஸ்டரின் மூலம் இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டிருந்தார். ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போர் நடத்திய பிரபல ஆந்திர புரட்சி வீரரான அல்லுரி சீதாராமராஜூ செய்த ராம்பா கலகம் பிரபலமானது. இந்நிலையில் தான் ராம் சரண் இவருடைய கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டது. 

இதனிடையே தெலுங்கில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான உகாதி பண்டிகையை ஒட்டி ஆர்.ஆர்.ஆர் படத்தின் மிக முக்கியமான இன்னொரு மாஸான போஸ்டரை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நாயகன்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் மக்கள் கொண்டாடுகின்றனர். 

மேற்படி ஆர்.ஆர்.ஆர் படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.


 

From around the web