பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முட்டுக்கட்டை: அதிர்ச்சியில் ஆர்ஜே அர்ச்சனா 

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்ற விட்டதாக தகவல்கள் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். அதில் ஆஜே அர்ச்சனாவும் இடம்பெற்றிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது 

மற்றொரு டிவ்யில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் அவர் விஜய் டிவியில் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படி அனுமதி அளித்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன

இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் படப்பிடிப்பு நடந்தபோது அதில் ஆர்ஜே அர்ச்சனா கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள அவர் பணிபுரியும் டிவி நிர்வாகம் முட்டுக்கட்டை போடுவதாகவும் இதனால் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படும் 

அந்த டிவியின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

From around the web