சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து காதலி ரியா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ: இணையத்தில் வைரல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென தற்கொலை செய்துகொண்டது குறித்த வழக்கின் விசாரணை தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது குறிப்பாக சுஷாந்தின் தந்தை பீகார் மாநிலம் பாட்னா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரியாசக்கரவர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து காதலி ரியா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ: இணையத்தில் வைரல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென தற்கொலை செய்துகொண்டது குறித்த வழக்கின் விசாரணை தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது

குறிப்பாக சுஷாந்தின் தந்தை பீகார் மாநிலம் பாட்னா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரியாசக்கரவர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சுஷாந்தின் தற்கொலைக்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்றும் தனக்கு கடவுள் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை உள்ளது என்றும் கண்டிப்பாக நீதியை தனக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

ஆனால் ரியா சக்கரவர்த்தியின் இந்த வீடியோக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்சிங்கின் தந்தையின் புகாரின்படி சுஷாந்தின் பல கோடி ரூபாய் பணத்தை ரியா தன்னுடைய வங்கி அக்கவுண்டிற்கு மாற்றியதாகவும் அவரது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அவரை மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web